இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனக் கூறியுள்ளார்.
வாக்களிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன யூடியூப்
வலைத்தளத்த்தில் அச்சுறுத்தல் விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (31.08) முறைப்பாடளித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புகின்ற
அதேவேளை அவர்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.