
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
பொறியில் சிறுத்தை சிக்கியிருப்பதை இன்று(01.09) காலை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இருப்பினும், பொறியினுள் இறுகச் சிக்கிக்கொண்ட சிறுத்தை உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வனவிலங்கு பொறியை வைத்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியாபொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.