ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(03.09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள பாராளுமன்றத்தில் கடந்த 21ம் திகதி விசேட உரை நிகழ்த்திய போது, கட்சிக்குள் காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், கருணாரத்ன பரணவிதான ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பட்டியலில் முன்னிலையில் இந்தமையினால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.