ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதார மேம்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கை

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதார மேம்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கை

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று(05.09) நடைபெற்றது. இந்த நிகழ்வு ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதார நிபுணர் குழுவினால், பொருளாதாரத்திற்கான முன்னேற்றம் எனும் தலைப்பில் நடத்தப்பட்டது.

இதன்போது ‘Economic Blueprint’ எனும் அறிக்கை வெளியிடப்பட்டது. இது 3வது அறிக்கையெனத் தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியுடன் ஆட்சி மாற்றம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் இந்த ‘Economic Blueprint’ எனும் அறிக்கை தம்மால் முன் வைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் இரண்டாம் பாகம் 2023ம் ஆண்டு ஐ.எம்.எப் ஒப்பந்தத்தின் போது வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது தேர்தலை முன்னிட்டு குறித்த அறிக்கையின் 3ம் பாகம் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

இந்த கொள்கையினுடாகவே அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்ததாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

இதன்போது, தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார மீட்சியிலும் பார்க்க, சட்ட அமுலாக்கமே மிக முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்திருந்தார். சட்ட சரியான முறையில் அமுலாக்கப்பட்டால் இந்த பொருளாதார பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இலங்கையிலுள்ள தொழிலதிபர்களை மையப்படுத்திய இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தது. இங்கு சஜித் பிரேமதாசவும் உரையாற்றியிருந்தார். கொள்கைகள் சீர்படுத்தப் பட வேண்டும், சரியா அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் முயற்சித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியினால் வெளியிடப்பட்டுள்ள  ‘Economic Blueprint’ எனும் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version