பிரச்சாரத்திற்காக வீடுகளுக்கு ஐவருக்கு மேற்பட்டவர்கள் செல்ல தடை

பிரச்சாரத்திற்காக வீடுகளுக்கு ஐவருக்கு மேற்பட்டவர்கள் செல்ல தடை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒரு கட்சி சார்பில் ஐந்து பேர் மாத்திரமே வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

5 ற்கு மேற்பட்ட நபர்களுடன் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இயலாது என நேற்று(08.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களில் மாத்திரம் பிரச்சாரத்திற்கான ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரின் வாகனத்தைத் தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் அல்லது வேறு பிரச்சார அம்சங்களைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version