வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரியத் தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாகக் கருதப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விடுமுறைக் காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறைக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக் காலத்தை நீட்டித்துக் கொள்ளும் அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரியத் தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிருபத்தை மீறும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version