
எதிர்வரும் 18ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நேற்று(10.09) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(11.09) முதல் கறுப்புக் கொடி பறக்கவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.