ஈஸ்டர் தாக்குதல் – தகுதி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதாக சஜித் உறுதி

ஈஸ்டர் தாக்குதல் - தகுதி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதாக சஜித் உறுதி

தகுதி தராதரம் பாராது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான
விசேட சந்திப்பொன்று கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை (11.09) இடம்பெற்றது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும்
சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.

மேலும் “ உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியமிக்கப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்புக்கு தாம் தோள் கொடுப்பதாகவும், நீதிமன்ற கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்,இதற்காக மேற்கொள்ள
வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்துவோம் என்றும் சஜித் பிரேமதாச இதன்போது வாக்குறுதியளித்தார்.

அவ்வாறே, உயர்த்து ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version