தென்னாப்பிரிக்க ஏ அணியை வீழ்த்திய இலங்கை ஏ அணி  

தென்னாப்பிரிக்க ஏ அணியை வீழ்த்திய இலங்கை ஏ அணி  

இலங்கை ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகளுக்கிடையிலான 4 நாள் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவின் டயமன்ட் ஓவல் மைதானத்தில் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென்னாப்பிரிக்க ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க ஏ அணி சகல விக்கெட்களையும் இழந்து 372 ஓட்டங்களைப் பெற்றது. இதன்போது இலங்கை சார்பில் எஷான் மலிங்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை சார்பில் ஓஷத பெர்னாண்டோ 122 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.  

49 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாப்பிரிக்க அணி 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் இசித விஜேசுந்தர 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் இறுதி நாளான இன்று(11.09) 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இலங்கை சார்பில் ஓஷத பெர்னாண்டோ 80 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, இலங்கை ஏ அணி 6 விக்கெட்டுக்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை ஏ அணி 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கையின் ஓஷத பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version