மீண்டும் சேமிப்புக்காக 15 வீத வட்டி – சஜித்

மீண்டும் சேமிப்புக்காக 15 வீத வட்டி - சஜித்

எமது நாட்டில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான 14,000 இற்கும் அதிகமான அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான தேசியக் கொள்கை திட்டம் ஒன்றை தயாரித்து, ஜனாதிபதி செயலணி ஒன்றையும் நிறுவி, ஒரு இலக்கோடு இந்த சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்போம் என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளினது உரிமைகளை பாதுகாக்கும் முகமாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ளும் வகையில், இந்நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அமைப்புக்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (11.09)இடம்பெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளின் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக 15 வீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால் அதனை தற்போதைய அரசாங்கம் இரத்துச் செய்திருக்கிறது.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அதனை நாம் மீண்டும் பெற்றுக் கொடுப்போம். தமது வாழ்வின் இறுதி காலகட்டத்தில் வாழ்கின்ற இவர்களுக்கு தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றி சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து சிரேஷ்ட பிரஜைகளுக்கான அமைப்புகளுக்கும் வருடாந்த நிதி ஒதுக்கிட்டை மேற்கொண்டு அவர்களுடைய செயற்பாட்டிற்கான வசதிகளைச் செய்து கொடுப்போம்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டையின் ஊடாக சுகாதார நிவாரணங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றை மேலும் அதிகரிப்போம். இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இடைக்கால சட்டமொன்றின் ஊடாக அவற்றை உறுதி செய்து பெற்றுக் கொடுப்போம்” என
சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version