தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம்: செல்வராசா கஜேந்திரன் கைது

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம்: செல்வராசா கஜேந்திரன் கைது

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சியில் இன்று (13.09) துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளதுடன் துண்டுப்பிரசுர விநியோகத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என எச்சரித்த பொலிஸார், அவரை விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version