ஐக்கிய மக்கள் கூட்டணி – தமிழ் முற்போக்கு கூட்டணி இடையிலான ஒப்பந்தம் வெளியீடு

ஐக்கிய மக்கள் கூட்டணி - தமிழ் முற்போக்கு கூட்டணி இடையிலான ஒப்பந்தம் வெளியீடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் கையெழுத்திட்டு உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தின் அடிப்படையிலான மலையக சாசனம் வெளியிடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் இலங்கை வாழ் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் இனம், குறிப்பாக பெருந்தோட்டத் துறையில் வாழ்கின்ற மக்கள், எதிர்நோக்கும் சவால்களை ஏற்றுக்கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி எனும் பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகளுக்கு இடையே ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பரந்த அரசியல் ஏற்பாட்டிற்குள் கடந்த ஒகஸ்ட் 11ம் திகதி கொழும்பில் முறையான புரிதலின் மூலம் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைவர்களினால் கையெழுத்து இட்டு ஏற்படுத்தப்பட்ட எழுத்து மூல வெளிப்பாடு இதுவாகும்.

இந்த ஒப்பந்த ஆவணத்தைக் கீழே காணலாம்,

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version