அடுத்த வருடம் வருமான வரியைக் குறைக்கத் தீர்மானம்

அடுத்த வருடம் வருமான வரியைக் குறைக்கத் தீர்மானம்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தைக் குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.  

இதுவரை மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் வரிக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் புதிய திருத்தத்திற்கு அமைவாக 150,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் தனிநபர் வருமான வரிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

புதிய திருத்தத்திற்கு அமைவாக 150,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை தனிநபர் வருமானத்தின் மீது 02 வீத வரி அறவிடப்படவுள்ளது.

200,000 ரூபா முதல் 300,000 ரூபா வரை வரி 4.2 வீதமும், 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை 8.8 வீதமும் 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை 13.5 வீதமும் 500,000 ரூபா 750,000 ரூபா வரை 18 வீதமும் 750,000 ரூபா முதல் 10,000,00 ரூபா வரை 24 வீதமும் 10,000,00 ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானத்திற்கு 27 வீதமும் தனி நபர் வரி வீதமாக நிர்ணயிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version