
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான நியூசிலாந்து அணி நேற்று(14.09) இலங்கை வந்தடைந்துள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி, காலியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியின் போது 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால், அன்றைய தினம் ஆட்டம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த போட்டியை இலவசமாகப் பார்வையிடுவதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போட்டியை இலவசமாகப் பார்வையிட விரும்புபவர்கள் காலி சர்வதேச மைதானத்தின் 4வது நூழைவாயிலினூடாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
தொடரின் இரண்டாவது போட்டி காலியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.