
நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இல்லாதொழிக்கும் என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் அரசியல்வாதிகளின் அனுசரணை நடைபெறுகிறது.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். அண்மையில் பல அரசியல்வாதிகள் தங்கள் ஜீப்பில் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை கொண்டு செல்லும் போது பிடிபட்டனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு சிறுவர்களும் பலியாகியுள்ளனர். குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது முழு குடும்பமும் துயர் ஏற்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி எவருக்கும் பயம் இல்லை. கடனாளியும் இல்லை. போதைப்பொருளை ஒழிக்கக்கூடிய ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி மட்டுமே.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் சுதந்திரத்தை பொலிஸாருக்கு தேசிய மக்கள் சக்தி வழங்கும். அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நீக்கப்படும் என்றும்” உறுதியளித்தார்