இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்  

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்  

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கைக்குச் சுற்றுலா செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் போது, தமது சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், ஊடகங்களைக் கண்காணித்து புதிய தகவல்களின் அடிப்படையில் திட்டங்களை மேற்கொள்ளுமாறும், அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version