ஹட்டன் – நுவரெலியா வீதியில் விபத்து

ஹட்டன் - நுவரெலியா வீதியில் விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா வின்டிகோனர் பகுதியில் இன்று(16.09) கார் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த சாரதி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளாகிய கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version