நாம் பெற்ற அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு – நாமல்

நாம் பெற்ற அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு - நாமல்

ராஜபக்ச அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச,

“நாம் ஏனோ தனோம் என்று வீதிகளை அமைக்கவில்லை. அதேபோன்று குடியிருப்புகளையும் நிர்மாணிக்கவில்லை.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டமும் தொலைநோக்கு பார்வையும் எங்களிடம் இருந்தது.

செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாங்கள் பொறுப்பு.
வாங்கிய ஒவ்வொரு கடனும் மதிப்பைக் கொடுத்திருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு.

திருடிவிட்டோம் என்று யாராவது சொன்னால், உலகில் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று நிரபராதி என்பதை நிருபிக்கத் தயார் என்று சவால் விடுகிறோம்.

போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறோமா என்று அண்மையில் எங்களிடம் கேட்கப்பட்டது.

எந்த தவறும் செய்யப்படவில்லை. எங்களைப் பற்றி வேறுவிதமான புரிதல் இருக்கலாம், ஆனால் மக்கள் முன் வந்து வாக்கு கேட்கும் வலிமை எம்மிடம் உள்ளது.

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது மற்றும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பது போன்ற சவாலையும் நான் ஏற்க விரும்புகிறேன். அந்த சவாலை நான் நிச்சயம் வெல்வேன்” எனவும் அவர் உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version