நியூசிலாந்தை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

275 என்ற வெற்றியில்க்குடன் துடுப்பாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணியின் ஆரம்ப விக்கெட் வேகாமாக வீழ்த்தப்பட்டது. 2 விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த டொம் லதாம் மற்றும் கேன் வில்லியம்சன் அதிரடியாகவும், நிதானமாகவும் துடுப்பாடி 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். கேன் வில்லியம்சனின் விக்கெட்டை பிரபாத் ஜயசூரிய கைப்பற்றிக்கொடுத்தார். கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் டொம் லதாமின் விக்கெட்டினை தனஞ்சய டி சில்வா கைப்பற்றினார். டொம் லதாம் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் ரமேஷ் மென்டிஸ் டேரில் மிட்சலின் விக்கெட்டினை கைப்பற்றினார். ரச்சின் ரவீந்திரா நிதானமாக இறுதி வரை துடுப்பாடி அவரின் 3 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். 5 விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த டொம் ப்ளன்டல், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாகவும், நிதனமாகவும் துடுப்பாடி 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். இவர்களின் இணைப்பாட்டத்தை பிரபாத் ஜயசூரிய முறையடித்தார். இவர்களின் இணைப்படடம் முறையடிக்கப்பட்டவுடன் அடுத்த 5 விக்கெட்களும் அடுத்தடுத்து வேகமாக வீழ்த்தப்பட்டன. துடுப்பாட்டத்தில் டொம் லதாம் 28 ஓட்டங்களையும், டெவோன் கொன்வே 4 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ன் 30 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 92 ஓட்டங்களையும், டேரில் மிட்சல் 8 ஓட்டங்களையும், டொம் ப்ளன்டல் 30 ஓட்டங்களையும், கிளென் ப்ளிப்ஸ் 4 ஓட்டங்களையும், மிட்சல், டிம் சௌதி ஆகியோர் 2 ஓட்டங்களையும் அஜாஸ் படேல் ஆட்டமிழக்காமல் 2 ஓட்டங்களையும், வில்லியம் ஓ ரோர்க் ஓட்டங்களை எதையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ் 3 விக்கெட்களையும், தனஞ்சய டி சில்வா, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர். பிரபாத் ஜயசூரிய அவரது 8 ஆவது தடவை 5 விக்கெட்களை கைப்பற்றினார். இவர் காலியில் 7 தடவைகள் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

போட்டியின் 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமல் 61 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியுஸ் 50 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுக்களையும், வில்லியம் ஓர்ர்கே 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதன்படி, நியூசிலாந்து அணிக்கு 275 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதலாம் நாள் விபரம்,

காலி சர்வதேச மைதானத்தில் கடந்த 18ம் திகதி ஆரம்பமாகிய போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பத்தும் நிசங்க அதிரடியாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போதும் 25 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். மறுபுறம், தினேஷ் சந்திமல் 30 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, களத்தில் இணைந்த கமிந்து மென்டிஸ், குசல் மென்டிஸ் ஜோடி 103 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்று அணிக்கு வலு சேர்த்தது. குசல் மென்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

7வது டெஸ்ட் சதத்தைக் கடந்த கமிந்து மென்டிஸ், இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைய இரு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இனுடாக 4 டெஸ்ட் சதங்களை விரைவாகக் கடந்த இலங்கை வீரராக கமிந்து மென்டிஸ் பதிவானர்.

போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை 7 விக்கெட் விழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் வில்லியம் ஓர்ர்கே 3 விக்கெட்டுக்களையும், க்ளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் பெற்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாள் விபரம்,

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் கடந்த 19ம் திகதி காலை ஆரம்பமாகியது. 3 விக்கெட்டுக்கள் மீதமிருக்க இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, 4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 305 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முதலாம் நாள் ஆட்டநேர முடிவின் போது களத்திலிருந்த பிரபாத் ஜயசூரிய ஓட்டங்கள் இன்றியும், ரமேஷ் மென்டிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த அசித்த பெர்னாண்டோவும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓர்ர்கே 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, டாம் லாதம் 70 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அதன்படி, நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டேரில் மிட்செல் 41 ஓட்டங்களுடனும், டாம் ப்ளூன்டெல் 18 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

போட்டியின் மூன்றாம் நாள் விபரம்,

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் (20.09) 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 50 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து, சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 340 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 35 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாம் நாள் நிறைவில் களத்திலிருந்த டேரில் மிட்செல் 57 ஓட்டங்களுடனும், டாம் ப்ளூன்டெல் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கக் களத்திற்கு வந்த ஏனைய வீரர்களும் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை சார்பில் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பத்தும் நிசங்க 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமல் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். முதல் இன்னிங்ஸில் சதம் கடந்த கமிந்து மென்டிஸ் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அஞ்சலோ மெத்தியூஸ் 34 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓர்ர்கே 3 விக்கெட்டுக்களையும், அஜாஸ் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version