புதிய ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஜீவன் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஜீவன் வாழ்த்து

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
சவால்களை எதிர்கொண்டு நம் நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்குத் தேவையான பலம் மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகவும் கடினமான காலகட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய நிலையான தலைமைத்துவம் விலைமதிப்பற்றது எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜீவன் தொண்டமான், அவரின் அமைச்சரவையில் பணியாற்றியமைக்கு பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version