
லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் வலுவடைந்து வரும் நிலையில், லெபனானில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கு அவசர தொலைபேசி இலக்கங்களை லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது.
லெபானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், 450க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 1,600க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1975 – 1990 இடைப்பட்ட காலப்பகுதியில் லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற மோதல்களில் மிகவும் மோசமான மோதலை லெபானான் எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லெபனானில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் அவசர தொலைபேசி இலக்கங்களை லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது.
லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்:
முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய – 0096170386754
மூன்றாவது செயலாளர் பிரியங்கி திசாநாயக்க – 0096181549162
மொழிபெயர்ப்பாளர் எம். ஏ. எம். பஹாத் – 0096181363894