இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தேர்வானமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான்
இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றதாகவும் இலங்கையின் நட்பு அண்டை நாடான சீனாவும்,
இலங்கையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவுடன் நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.