சிவகங்கை மாவட்டம், சாகிர் உசேன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், சாகிர் உசேன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கடந்த 21.09.2024 அன்று கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா ஆகியோர் பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தனர்.

சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, உறுப்பினர், தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நவாஸ் கனி, 1400 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் அப்துல் அஹத், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உஸ்மான் அலி, அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version