நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று(25.09) மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(26.09) காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் நுவரெலியா, கலுகெல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.