
கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் விலகுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் கே.ரி. குருசாமி
கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் வெற்றிடமான பொது செயலாளர் பதவிக்கு முருகேசு பரணிதரன் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று (26.09) கூடி
பரணிதரனை ஏகமனதாக நியமித்தது.
முருகேசு பரணிதரன் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் அரசியல் குழு உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில், எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்படவும் இதன்போது தீர்மானிக்கபட்டது.