
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று(26.09) இணைந்து கொண்டனர்.
பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டனர்.
தென்னிலங்கையின் அரசியல் அபிப்பிராயத்தை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் என அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இந்த இரண்டு அரசியல் முகாம்களும் ஒன்றிணைந்து தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி ஒன்றிணைய வேண்டும் எனவும், தனி நபர்களை விட அரசியல் சித்தாந்தமே பிரதானமானது என்பதனால், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து வெற்றிக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனவே அரசியல் முரண்பாடுகளை மறந்து இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, தெற்கு அரசியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் நாட்டுக்காக செயற்பட்டு நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென யட்டிநுவர பிரதம அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு குழுக்களாகப் பிரிந்தால் நாடு அழிந்துவிடும் எனவும் இடதுசாரி அரசியலில் இருந்து நாடுகள் மீளவில்லை என்பதால் வலதுசாரி அரசியலே வெல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களை தவறாக வழிநடத்தி ஒரே கொள்கைக்காக நாம் நிற்கக் கூடாது என்றும், நாட்டில் பல சவால்கள் உள்ளதால், இந்த சவால்களை முறியடிக்க தெற்கு முகாமை பலப்படுத்த வேண்டும் என்றும்,
அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.