புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு நியமனம்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு - 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழு நியமனம்

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக 07 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன விசாரணை அதிகாரிகளும், சுயாதீன கண்காணிப்பு அதிகாரிகள் குழாமும் அந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுவின் விசாரணை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version