ரைஸ் மற்றும் கொத்து விலை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையை மக்களுக்கு வழங்காத கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
முட்டை விலை குறைவடைந்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையில் எதுவித மாற்றமும் மேற்கொள்ளப்படவிலை்லை.