கொழும்பு, மாத்தளை, பிங்கிரியமற்றும் ஓமந்தை ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து விளையாட்டு மையங்களை வழமையான திறப்பு விழாக்களின்றி பொதுமக்களுக்குத் திறந்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
திணைக்கள பிரதானிகளுடன் விளையாட்டு அமைச்சில் கடந்த 27ம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதியிலும், செப்டெம்பர் மாத முதற் பகுதியிலும் குறித்த 5 விளையாட்டு மையங்களின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
குறித்த ஐந்து விளையாட்டு மையங்கள்:
1. கொழும்பில் ஒலிம்பிக் தரத்திலான ஹாக்கி ஆடுகளம்
2. மாத்தளையில் ஒலிம்பிக் தரத்திலான ஹாக்கி ஆடுகளம்
3. பிங்கிரியவில் உள்ள வடமேற்கு விளையாட்டு மையத்திலுள்ள 50 மீட்டர் நீச்சல் தடாகம்
4. ஓமந்தை, வவுனியா விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 25 மீட்டர் நீச்சல் தடாகம்.
5. ஓமந்தையில் உள்ள வவுனியா விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டு அரங்கு