அரசு இயந்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை, வாக்குகளாக வாக்குப் பெட்டிகளினுள் ஈடும் செயற்படே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தைத் தேர்தலின் போது தெளிவாகக் காணக்கூடியதாக இருந்ததாக, கொழும்பில் நேற்று(03.10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்:
“சமூக வலைத்தளங்களின் தியவன்னாவ குளம் முழுமையாகத் தூய்மையாக்கப்படும், பாராளுமன்றமே வேண்டாம், 225 உறுப்பினர்களும் தேவையில்லை போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நான் மக்கள் விடுதலை முன்னணியிடம் ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அரசியல் சாதக தன்மையை மிகவும் புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டும். இல்லையென்றால், நாம் எதிர்பார்ப்பதை விட வேகமாக அவர்களை அழைத்து வந்த மக்களே வீதியில் இறங்கி பாரிய போராட்டங்களைச் செய்ய வாய்ப்புக்கள் உண்டு” என அவர் தெரிவித்துள்ளார்.