இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(04.10) இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கை ஜனாதிபதியுடன் இன்று(04.10) கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக, கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் வெளியிட்டுள்ள X தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் முதலில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இருவரும் இரு நாட்டு நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version