ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது 36 ஆண்டுக்கால பாராளுமன்ற பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
பல தசாப்த கால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது லக்ஷ்மன் கிரியெல்ல (வயது 76) சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அவரின் மகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.