கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

நாரஹேன்பிட்டி – கொழும்பு மாவட்ட செயலகத்தை அண்மித்த பகுதியில் இன்று(11.10) விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

2024ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடையவுள்ள நிலையில், விசேட போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

இதற்கமைய, இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த திட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பிலிருந்து கிருலப்பனை நோக்கிப் பயணிக்கும் இடது பாதை , பேஸ்லைன் வீதி – நாரஹேன்பிட்டி சந்தியிலிருந்து பார்க் வீதி சந்தி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரை பொரளை நோக்கிப் பயணிக்கும் குறித்த வீதி இருபுறமும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version