கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – 18 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் விபத்து - 18 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (11.10) காலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

உதுவான்கந்த, வலகடயாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது என இரண்டு பஸ்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தோர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று கேகாலையிலிருந்து மாவனெல்ல நோக்கி சென்று கொண்டிருந்த
மற்றுமொரு பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாணந்துறையில் இருந்து வந்த பஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை
இழந்தமையினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version