முன்னணி விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் தேர்தல் களத்தில்

முன்னணி விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் தேர்தல் களத்தில்

விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும், இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான கருப்பையா ராமகிருஷ்ணன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

பல முன்னணி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பணியாற்றியுள்ள கருப்பையா ராமகிருஷ்ணன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

லயன் நேஷன் விளையாட்டு வலையமைப்பின் (Lion Nation Sports Network) ஸ்தாபகரும், பணிப்பாளராகவும் கடமையாற்றும் இவர், இலங்கையின் விளையாட்டுத் துறையை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஊக்குவிப்பதற்கு பணியாற்றியவர்.

மேலும், விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் ரவீந்திரன் ஹரினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு தமிழ் வேட்பாளராவர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version