ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்குகள் பின்வருமாறு:
- 2015ம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி மோசடி
- உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்
- ஊடகவியலாளர் டி.பி சிவராம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டு (ஏப்ரல் 28, 2005)
- லலித்குமார் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை (டிசம்பர் 9, 2011)
- 2006இல் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனமை
- தினேஷ் ஷாப்டரின் மரணம்
- வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்