நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாகனம் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் வீட்டில் நேற்று (12.10) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டோ உபயோகிக்கப்படாமல் இருக்குமாயின் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கூறப்பட்டிருந்தது.

இதற்கமைய நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து
சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வாகனம் மீட்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version