முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் நீர்கட்டணம் செலுத்தவில்லை

முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் நீர்கட்டணம் செலுத்தவில்லை

முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தவில்லையென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து நீர் கட்டணத்திற்காக 09 மில்லியன் ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விதிமுறைகளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எந்தவொரு சலுகைகளும் இன்றி அரச சுற்றறிக்கையின்படி அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version