நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலவத்துகொட கிறேன்ட் மொனார்க் ஹோட்டலில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின்
ஒன்றுகூடல் இன்று (13.10) நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.
வடக்கு மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர்
தெரிவித்தாகவும் ஜனாதிபதி கூறினார்.
தற்போது நாடாளுமன்றம் மக்களின் சொத்துக்களை வீணடிக்கும் இடமாக முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில்
வலுவான பிரதிநிதித்துவத்தையும் பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பலமான அரசியல் தலைமைத்துவம் கொண்ட பொறிமுறையொன்றை நாம் பெற்றால்
மாத்திரமே புதிய வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.