
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 869 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 265 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 604 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 78 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், வன்முறைச் சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.
இதுவரையில் 723 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 146 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.