தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்

ரயில் நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

உரிய நடைமுறைகளை மீறி ரயில் நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பதவிகளுக்கான பரீட்சைகளை நடத்தி நியமிப்பதற்கும் அல்லது பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த முறைமைக்கு மாறாக தற்போது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version