தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29.10) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிட அனுமதி கோரினார்.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக பெயரிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு,மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.