பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை(31.10) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலாக எதிர்வரும் நவம்பர் மாதம் 09ம் திகதி சனிக்கிழமையன்று விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version