ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இன்று(30.10) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version