முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து இன்று(31.10) கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்தேவின் மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு அண்மையில் தகவல் கிடைத்திருந்தது. இதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, கடந்த 26ம் திகதி குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வீட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொஹான் ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் குறித்த காரை வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version