சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இதன்படி அடுத்த வாரம் நாட்டுக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் இந்த நாட்டில் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.