வாக்களிப்பு நிலையங்களுக்குள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்

வாக்களிப்பு நிலையங்களுக்குள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்

பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 இற்கும் அதிகமான பொலிஸாரும் 3,200 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிகமாக இராணுவத்தினரும், சிவில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புக்காகத் தயார் நிலையில் உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version