பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 23 ஆம் திகதி மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா கிழக்கு மாகாணத்திற்கு நேற்று முன்தினம்(10.11) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்பின்னர் அறுகம்பே உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version