சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் இளம் வயதினர், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் 62 வயதுடைய ஒருவர் எனவும், விவகாரத்தினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் இவ்வாறு செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.