தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்கக் கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் இன்று (17.11) இடம்பெற்றது.
இதன்போது தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் பின்னர் குறித்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.